இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் கேரள கல்வி அமைச்சர் பிந்து கதகளி நாட்டியம் அரங்கேற்றம்

 

பாலக்காடு, மே 10: இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் கேரள கல்வித்துறை அமைச்சர் பிந்துவின் கதகளி நாட்டியம் நேற்று அரங்கேறியது. கேரளா மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளும், ஒரு முறை மாநில பள்ளிக்கூட கலைவிழாவிலும் கதகளி நாட்டியம் ஆடியவர். நளசரிதம் 1 வது பகுதியில் தமயந்தியாக அமைச்சர் பிந்து கதகளி வேடம் அணிந்து இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கிருஷ்ணர் கோயில் விழாவில் அரங்கேற்றம் நடத்தினார். 13 வது வயது முதல் கலா நிலையம் ராகவன் ஆசானின் தலைமையில் கதகளி அரங்கேற்றம் செய்துள்ளார்.

ஒன்றரை மணிநேரம் தொடர்ந்து நடந்த கதகளி நாட்டியத்தில் கேரள கல்வி அமைச்சர் பிந்து தமயந்தியாக வேடம் அணிந்து நடனமாடினார். திருச்சூர் மாவட்ட புறநகர் எஸ்பி ஐஸ்வரியா டோங்கிரே உட்பட பிரமுகர்கள் கதகளி நாட்டியம் பார்த்து ரசித்தனர். கலா நிலையம் ராஜீவன், வேங்கேரி நாராயணன் ஆகியோர் சங்கீதம் பாட, கலா மண்டலம் ஸ்ரீராஜ் செண்டை, கலா நிலையம் பிரகாசன் மத்தளம், நந்தகுமார் இடக்கை ஆகியோர் பக்க வாத்தியங்கள் வாசிக்க அமைச்சர் பிந்து கதகளி நாட்டியத்தை ஆடினார். இதனை ஏராளமான பார்வையாளர்கள் ரசித்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை