இரவில் போன் செய்யும் மாவட்ட தலைவர் பாஜவில் சேர பெண்கள் தயக்கம்: தமிழக பொறுப்பாளரிடம் விழுப்புரம் நிர்வாகிகள் புகார்

விழுப்புரம்:  திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வானூர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மீது புகார் மனு அளித்தனர். அதில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாவட்ட தலைவர் முழுமையாக எடுத்துக் கொண்டார். மேலும் கிளை அளவில் ஒதுக்கப்படும் நிதியை கூட முழுமையாக கையாடல் செய்துள்ளார். வானூர் ஒன்றியத்தில் மகளிர் நிர்வாகிகளிடம் இரவு நேரங்களில் போன் செய்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் புதிதாக மகளிர் உறுப்பினர்கள் சேருவதில்லை. ஒன்றிய நிர்வாகிகளையும் பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார். அதேபோல் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திலும் கட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருவதாக கூறியுள்ளனர். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்….

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்