இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: 2 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ₹160 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹4760க்கும், சவரன் ₹38,080க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி கிராமுக்கு ₹10 அதிகரித்து ஒரு கிராம் ₹4760க்கும், சவரனுக்கு ₹80 அதிகரித்து ஒரு சவரன் ₹38, 160க்கு விற்கப்பட்டது.9ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ₹25 அதிகரித்து ஒரு கிராம் ₹4,795க்கும், சவரனுக்கு ₹200 அதிகரித்து ஒரு சவரன் ₹38,360க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹280 அதிகரித்தது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ‘திடீரென’ குறைந்தது. அதாவது, கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹4,775க்கும், சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹38,200க்கும் விற்கப்பட்டது….

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது