இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி: தொடரை சமன் செய்தது

கிங்ஸ்டன்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 109 ரன் வித்தியாசத்தில்
அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி, 1-1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்தது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 4 ஆட்டங்களை டி20
தொடர், 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை பாக்.
1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரின் முதல்
போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று முன்னிலை பெற்றது. இந்நிலையில், சபினா
பார்க் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ்
பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்
இழப்புக்கு 302 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய
வெ.இண்டீஸ் 150 ரன்னில் சுருண்டது. 152 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை
விளையாடிய பாக். 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து,
329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெ.இண்டீஸ் 4வது நாள்
முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்தது. கடைசி நாள்
ஆட்டத்தில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 219 ரன்னுக்கு ஆல்
அவுட்டானது. கேப்டன் பிராத்வெய்ட் 39, மேயர்ஸ் 32, ஹோல்டர் 47 ரன் எடுக்க,
மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். 109 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான்,
தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் இன்னிங்சில் 6, 2வது
இன்னிங்சில் 4 என 10 விக்கெட்களை வீழ்த்திய ஷாகீன் ஷா அப்ரிடி ஆட்ட நாயகன்,
தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். இவர் முதல் டெஸ்டின் 2
இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் அள்ளியது குறிப்பிடத்தக்கது….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி