இரண்டாம் சீசன் துவங்கிய பிறகும் மரவியல் பூங்கா வெறிச்சோடியது

ஊட்டி  :இரண்டாம் சீசன் துவங்கிய நிலையில் ஊட்டி மரவியல் பூங்கா புல் மைதானம் முறையாக பராமரிக்கப்பட்டு பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இரண்டாம் சீசன் துவங்கிய நிலையில், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உட்பட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள மரவியல் பூங்காவிலும் பராமரிப்பு பணி முடிந்த நிலையில், பூங்காவில் உள்ள உள்ள புல் மைதானம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. தற்போது, மலர்கள் குறைந்தளவே உள்ள போதிலும், பாத்திகளில் பலர்கள் பூத்து காணப்படுகிறது.தொடர்ந்து, புல் மைதானம், நடைபாதை, மரங்களை சுற்றி நடவு செய்யப்பட்டள்ள மலர் நாற்றுக்கள் ஆகியவற்றை பராமரிக்கும் பணிகளும் நடக்கிறது. இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில், போதிய விளம்பரமும் செய்யப்படாத நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தே காணப்படுகிறது.  மிகவும் அழகாக நகருக்குள்ளேயே காட்சியளிக்கும் இப்பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்