இரணியல் அருகே போதையில் பைக் ஓட்டிய 2 பேர் மீது வழக்கு: பொது இடத்தில் மது குடித்தவரும் சிக்கினார்

திங்கள்சந்தை, ஜூன் 25: இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குருந்தன்கோடு, திங்கள்நகர், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குருந்தன்கோடு பாலம் அருகில் பொது வெளியில் மது குடித்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுனில் இன்பராஜ் (42) என்பதும், ஆப் மது பாட்டிலை வாங்கி அதில் பாதியை பொது வெளியில் வைத்து குடித்ததும் தெரியவந்தது. அவரை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மீதமிருந்த மது பாட்டிலுடன் அவரை இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் மது போதையில் தனித்தனியாக பைக்குகளில் வந்த ரமேஷ் (37), ஜெபின் (29) ஆகிய 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அவர்கள் மது போதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். பொது இடத்தில் மது குடித்த நபர், மது போதையில் பைக் ஓட்டிய 2 பேர் என்று மொத்தம் 3 பேர் மீதும் தனித்தனியாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு