இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி

 

முசிறி, ஏப்.21: இயற்கை விவசாயம், மாசுபாடு மற்றும் சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடை பெற்றது. திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டத்தினை தொடர்ந்து அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் செயற்கை உரங்கள் இன்றி இயற்கை வழியில் வேளாண்மை செய்வதற்கான முறைகளை பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் கனிமொழி, கயல்விழி, கிருத்திகா, லட்சுமி பிரியதர்ஷினி, லதா, மகிமா,மிதுஷா, மொனிகா ஆகியோர் கொண்ட குழு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை விவசாயம் மற்றும் மாசுபாடு பற்றி விழிப்புணர்வும் சாலை பாதுகாப்பு பற்றிய பேரணியும் வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்தினர்.

 

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்