இயற்கை உரத்திற்கு மாற்றம் வயல்களில் கிடைபோடும் பணி தீவிரம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் சம்பா சாகுபடி துவங்கும் நிலையில் ஆடு மாடுகளை கொண்டு வயலுக்கு இயற்கை உரங்கள் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், பிராந்தியங்கரை, மூலக்கரை, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்களில் இயற்கை உரம் சேர்ப்பதற்காக செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை கிடை போட்டு வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளோடு வந்து இங்கு தங்கி உள்ளனர். இவர்கள் கொண்டு வந்துள்ள செம்மறி ஆடுகள் வயல்களில் வரப்புகளில் கிடைக்கும் பச்சை புற்களை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்த ஆடுகளின் கழிவுகளை சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. ஆடு, மாடுகளின் கழிவு சிறந்த இயற்கை உரம் என்பதால் இப்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் பகலில் இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இரவு நேரங்களில் கிடைபோட்டு அடைத்து வைக்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை