இயற்கையின் கருணையை எதிர்நோக்கும் விவசாயிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் அறிவிக்க வேண்டும்

நாகப்பட்டினம்: லாபம், நஷ்டம் என்பது விற்பனையாளர்களுக்கு பொருந்தாது. எனவே டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லாபத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீத போனசை தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளனர். டாஸ்மாக் நிறுவனம் லாபத்தில் செயல்படும் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்தது. இந்த நேரத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனசை மேலாண் இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும். அதேபோல் பொதுவிநியோக திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் லாபத்தில் இயங்கும் சொசைட்டிகளுக்கு 20 சதவீதமும், நஷ்டத்தில் இயங்கும் சொசைட்டிகளுக்கு 10 சதவீதமும் போனஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விநியோகம் செய்யும் பொருட்களை நியாயவிலை கடை பணியாளர்கள் விற்பனை செய்கின்றனர். லாபம், நஷ்டம் என்பது விற்பனையாளர்களுக்கு பொருந்தாது. எனவே டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை