இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக கருத்து வெளியிட கவிஞர் லீனா மணிமேகலை பாடகி சின்மயிக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ம் ஆண்டு ‘‘மி டூ’’ ஹேஷ்டேக்  மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு  சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துகளை பதிவிட்டனர்.இதையடுத்து, உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருகிறார்கள். அதன் உண்மை தன்மையை ஆராயாமல் சமூக வலைதளங்களும், ஒரு இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருகிறது. எனவே, தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இருவரும் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் எனக்கோரி இயக்குனர் சுசி கணேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கில் லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை