இன்றைய மின்தடை பகுதிகள்

கீழக்கரை / மண்டபம், மே 11: கீழக்கரை துணை மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்பாதைகளில் இன்று (மே 11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல் நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்குவெட்டி தெரு, இந்து பஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்கெட், பைத்துமால், அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா பெத்தரி தெரு,  நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர், மேலத்தெரு, வடக்குத்தெரு, சின்னக்கடைத்தெரு, தெற்குத்தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம், விவேகானந்தபுரம், பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பனங்கால், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மண்டபம், பட்டணம்காத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (மே 11) நடைபெறுகிறது. இதனால் பாரதி நகர், நேரு நகர், மகா சக்தி நகர், புளிக்காரத்தெரு, குமரையா கோயில் முல்லை நகர், வட்டார போக்குவரத்து அலுவலகம், சிவஞானபுரம். மண்டபம் முகாம், ஏகே.எஸ் தோப்பு, டி- நகர், அம்பலகார தெரு, மேற்கு தெரு, வடக்கு தெரு, ஆசாரி தெரு, கடை வீதி, மைக்குண்டு, பொங்காளி, தோப்புக்காடு, மண்டபம் வடக்கு கடற்கரை பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி