இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு

* பாஸ்புக், ஆதார் பதிவு நிறுத்தம்* ‘செக்’ நேரடி டெபாசிட் இல்லை* மாநில வங்கியாளர் குழுமம் அறிவிப்புசென்னை: தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நடைபெறும் என்று மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது. காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.வங்கிகளுக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம். ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும்.வழக்கமாக பெரிய கூட்டம் கூடும் கிளைகளில் மாவட்ட மேலாளர் மூலம் கூட்டத்தை கவனிக்க காவல்துறை உதவியை நாட வேண்டும் வங்கியில் உள்ள பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.வங்கிகளில் பணிபுரியக்கூடிய இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்க வங்கியாளர்கள் குழுமம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு