இன்று முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நெரிசல் மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை : 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்ட உள்ளது. இன்று முதல் 22-ம் தேதி வரை நெரிசல் மிகு நேரங்களில் இயக்கப்படுவது போல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த 3 நாட்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 10 மெட்ரோ ரயில் சேவை இயக்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழக்கமாக வார நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட வந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களுக்கு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 5 நிமிட இடைவெளியில் உள்ள ரயில் சேவை தேவைக்கேற்ப 5 நிமிடத்திற்கு குறைவாகவும் இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த கூடிய பயனாளர்கள் அதிக நேரம் காத்திருக்க கூடிய நிலை ஏற்படாது என்றும், இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அதிக கூட்டத்தை கட்டுப்படுத்த கூடிய வகையில் மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி மாலை 5 மணி முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 10 மணி வரை அடுத்த 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.     …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை