இன்று தை கிருத்திகை திருநாள்: அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன்

திருவண்ணாமலை: தை கிருத்திகையான இன்று திரவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தை கிருத்திகையொட்டி முருகர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டதும் கம்பத்துஇளையனார் சன்னதி மற்றும் கோபுரத்து இளையனார் சன்னதியில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கவாடி எடுத்து மாடவீதியில் வலம் வந்து முருகபெருமானை வணங்கினர்.  இதேபோல் திருவண்ணாமலை அடுத்த மங்கலம், எறும்பூண்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள  முருகர் கோயில்களில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறக்கும் காவடி எடுத்தும், ேதர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். …

Related posts

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

சுயலாபம், அதிகார வெறிபிடித்த தலைவர்களால் அதிமுக கரைகிறது பிரதமர் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடி: அண்ணாமலை ஆவேச பதிலடி

கட்சி வளர்ந்திருப்பதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் பொய்யையே பேசி வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு