இன்று அதிரடியாக உயர்ந்து தங்கத்தின் விலை: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை

சென்னை: சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.70 உயர்ந்து ரூ.4535-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 உயர்ந்து  ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஓரே நாளில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,465-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.73.10-க்கு நேற்று விற்பனையானது. கடந்த வாரத்தில் பவுன் ரூ.35,528க்கு விற்பனையானது. மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்திற்கான இறக்குமதி வரி  இரண்டரை சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று மாலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.36,520க்கும் விற்கப்பட்டது. 3ம் தேதி பவுனுக்கு ரூ.288 குறைந்து ஒரு பவுன் ரூ.36,232க்கும் விற்கப்பட்டது.  4ம் தேதி ரூ.368 குறைந்து ஒரு பவுன் ரூ.35,864க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் பவுன் ரூ.1,136 அளவுக்கு குறைந்தது. இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து உள்ளது நகை வாங்குவோருக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு சவரன் ரூ.56,880க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்செக்ஸ் 1800 புள்ளிகளுக்கு மேல் சரிவு

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு