இன்ஜி., கல்லூரியில் தமிழ் பேராசிரியர்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு கற்பிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டிலும் தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். …

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்