இன்சர்ட் பண்ண வேண்டாம் அப்படியே போட்டுக்கலாம்…

புதுடெல்லி : இந்திய ராணுவ வீரர்களுக்காக கரடுமுரடான அனைத்து பகுதிகளிலும், அனைத்து பருவநிலைகளிலும் அணியக் கூடிய புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த அணிவகுப்பில் பாராசூட் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் புதிய சீருடையுடன் கம்பீரமாக கலந்து கொண்டனர். பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப இந்த புதிய சீருடை, ஆலீவ் மற்றும் மண் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களுக்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள், எந்த மாதிரியான தட்பவெப்ப சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு இந்த சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு ராணுவ வீரர்களின் சீருடைகளை ஆராய்ந்த பின் தேசிய ஆடை தொழில்நுட்பக் கல்லூரி உதவியோடு இந்த சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு, இந்திய ராணுவம் வழங்கிய விவரங்களின்படி இந்த பணியை மேற்கொண்டுள்ளது. ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டுவர விரும்பியதால் ராணுவம் இந்த புதிய சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது பாலைவனம், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள், போர்களுக்கு என ராணுவ வீரர்களுக்கு தனித்தனியாக சீருடைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அனைத்து நிலப்பரப்புகளிலும், போர்களின் போதும் இந்த புதிய சீருடை மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும், பழைய சீருடையை போல் இதை ‘இன்சர்ட்’ செய்ய தேவையில்லை. அப்படியே பேன்ட்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம். புதிய சீருடையின் சட்டைக்குள் பனியன் ரக ‘டி சர்ட்’டும் இணைக்கப்பட்டுள்ளது.புலிகளின் சீருடை போல் உள்ளதா?* ராணுவத்தின் புதிய சீருடை மெலிதான  துணியால் ஆனது. கடுமையான தட்பவெப்ப நிலையையும் தாங்கும்.* பருத்தியும், பாலியஸ்டரும் 70:30 என்ற விகிதத்தில் சேர்க்கப்பட்டு, சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. * புதிய சீருடைகள் ராணுவத்தில் மட்டுமே தயாரிக்கப்படும். * வெளிச்சந்தையில் விற்பனைக்கு கிடைக்காது.* இந்த சீருடை விடுதலைப் புலிகளின் சீருடையுடன் மிகவும் ஒத்து போவதாக கூறப்படுவதை, ராணுவம் நிராகரித்துள்ளது….

Related posts

Auto Draft

Auto Draft

Auto Draft