இனி காட்சி பொருளாக தான் பார்க்கணும் போல!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..இல்லத்தரசிகள் கலக்கம்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகும். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்துறைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கி இருப்பதால் பிற பங்குகளின் மீதான முதலீடுகள் உயர்ந்துள்ளன. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,000ஐ  தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து, ரூ.34,000க்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதன்தொடா்ச்சியாக, 
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,595 ரூபாய்க்கும், சவரன் ரூ.36,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.32 உயர்ந்து ரூ.36,752க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 உயர்ந்து ரூ.4,594 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.76 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.76,000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்