இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் எலோன் மஸ்க்: டைம் இதழ் புகழாரம்

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனரான எலோன் மஸ்க், இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் என அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் கடந்த 1971ம் ஆண்டு பிறந்த எலோன் மஸ்க்கின் தந்தை கனடாவை சேர்ந்தவர் என்பதால் பின்னாளில் அவர் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார். தமது 12வது வயதிலேயே கணினிகளின் மென்பொருளை உருவாக்கும் அளவுக்கு அத்துறையில் ஆர்வம் மிக்கவராக திகழ்ந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு பேபால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கிய அவர், தற்போது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ், ஜிப்2, சோலார் சிட்டி, ஹைப்பர்லூப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலராகவும், இணை நிறுவனராகவும் பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலையில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அதாவது, விண்வெளிப் பந்தய போட்டியாளரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். இந்நிலையில், எலோன் மஸ்க் இந்த ஆண்டின் தலைசிறந்த மனிதர் என டைம் இதழ் அறிவித்துள்ளது. டைம் தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை முதன்முதலில் 1927 இல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. …

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது