இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் திடீரென உயிரிழப்பு!: அனைத்து நிறுவன இருமல் மருந்துகள் விற்பனைக்கு தடை..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் திடீரென 99 குழந்தைகள் மரணமடைந்திருப்பதால் அனைத்து வகையான இருமல் மருந்துகளின் விற்பனையை உடனடியாக ரத்து செய்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தன. அத்துடன் 70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4 இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தோனேசியாவில் 6 வயதுக்கு உட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளன. 206 குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இருமல் மருந்துகள் விற்பனையும் தடை செய்வதாக இந்தோனேசிய அரசு அறிவித்திருக்கிறது. திரவ நிலையில் உள்ள இருமல் மருந்துகளில் நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்திருப்பதால் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவின் அறிக்கை வரும் வரை எந்த இருமல் மருந்தையும் விற்பனை செய்யக்கூடாது என்று இந்தோனேசிய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. இருமல் மருந்துகளால் இந்தோனேசியாவிலும் 99 குழந்தைகள் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. …

Related posts

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்