இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் குமரி வருகை : அமைச்சர், எம்பி, எம்எல்ஏ அஞ்சலி

நித்திரவிளை: குமரி மற்றும் கேரள பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் தீவில் இருந்து கடந்த பிப்ரவரி 17ம் தேதி ஆழ்கடலில் விசைப்படகில்  மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மார்ச் 7ம் தேதி இந்த 8 மீனவர்களையும்,  விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  இந்தோனேசியா கடற்படையினர் கைது செய்தனர். அதில் 4 மீனவர்களை சில நாட்கள் கழித்து விடுதலை செய்தனர். தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ் (33), உட்பட  4 பேரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி மரிய ஜெசின் தாசுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா சிறை நிர்வாகம் ஒரு நாள் கழித்து 11ம் தேதி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் கடந்த 20ம் தேதி இறந்தார். இந்தோனேசியாவில் இருந்து அவரது உடல் நேற்றுமுன்தினம் இரவு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  வரப்பட்டது. அங்கு நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து உடல் நேற்று மாலை தூத்தூர் கொண்டு வரப்பட்டது. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தூத்தூர் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது….

Related posts

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 2 தமிழக வீரர்களுக்கு வரவேற்பு