இந்து சமய அறநிலையத்துறையில் துணை ஆணையராக 30 பேர் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டுக்கு துணை ஆணையர் பதவிக்கு காலி பணியிட மதிப்பீடு நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் காலி பணியிட மதிப்பீட்டின் அடிப்படையில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கு தேவையான உரிய செயற்குறிப்பினையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடிதத்தில் அரசுக்கு அனுப்பியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையில், உதவி ஆணையர் பதவியிலிருந்து பதவி உயர்வின் மூலம், துணை ஆணையர் பதவிக்கு நியமனம் செய்வதற்கு 2021-22ம் ஆண்டுக்கான காலி பணியிட மதிப்பீடு 30 (முப்பது) என அரசாணையில் நிர்ணயிக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையரது செயற்குறிப்பு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்து சமய அறநிலையத்துறையில் 2021-22ம் ஆண்டுக்கு, ‘‘உதவி ஆணையர்” பதவியிலிருந்து பதவி உயர்வின் மூலம் ‘துணை ஆணையராக நியமிப்பதற்கான தற்காலிக பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தில் விலக்களித்து தமிழக ஆளுநரால் ஆணையிடப்படுகிறது. 2021-22ம் ஆண்டுக்கு துணை ஆணையர் பதவிக்கான தற்காலிக பெயர் பட்டியலில் முன்னுரிமை வரிசைப்படி எஸ்.ஞானசேகரன், வே.குமரேசன், எஸ்.சிவராம்குமார், ஜெ.பரணிதரன், வா.ஆனந்த், பெ.ரமேஷ், செ.மாரியப்பன், ச.கிருஷ்ணன், ஜெ.முல்லை, ஜெயப்பிரியா, ஜோதி, வே.சபர்மதி, பெ.க.கவெனிதா, க.ரமணி, இரா.பிரகாஷ், து.ரத்தினவேல்பாண்டியன், விஜயா, அருணாசலம், ஜான்சிராணி, க.ராமு, இரா.மேனகா, எம்.சூரியநாராயணன், ந.சுரேஷ், டி.சிவலிங்கம், எஸ்.வி.ஹர்சினி, ஆர்.ஹரிஹரன், எஸ்.சுப்பிரமணியம், உமாதேவி, எஸ்.வெங்கடேஷ், எம்.ராமசாமி ஆகிய உதவி ஆணையர்களை சேர்க்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை