இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர் சீனாவில் தசரா கொண்டாட்டம்

பெய்ஜிங்: சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த தசரா விழாவில் தூதர்கள், சீனர்கள் மற்றும் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. தூதரகத்தில் தசரா முன்னிட்டு நேற்று முன்தினம் கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்திய கலைப்பொருட்கள், படுக்கை விரிப்புக்கள், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மெழுவர்த்திகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. மேலும் பரதநாட்டியம், கதக், பாலிவுட் பாடல்கள், தமிழ் கிராமிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  இந்த விழாவில் பெய்ஜிங்கை சேர்ந்த தூதர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், சீனாவை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். …

Related posts

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலி எண்ணிக்கை 569 ஆக அதிகரிப்பு: முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு: நவ.14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!