இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது – ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை: இந்தியாவில் 2020 – 21ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மைனஸ் வளர்ச்சியாக பதிவாகி இருக்கும் நிலையில் இதேநிலை நீடித்தால் மிகப்பெரிய விளைவுகளை நாடு சந்திக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். 2020 – 21ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.3 விழுக்காடு என மத்திய புள்ளியியல் மையம் கூறியிருப்பதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஜிடிபி மைனஸில் செல்வது 1978 – 79ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -7.3 விழுக்காடு வளர்ச்சி என்பது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜிடிபியை விட குறைவானது என்று ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். 2020 – 21ஆம் ஆண்டு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு இருண்ட ஆண்டு என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ஜிடிபியை அதிகரிக்கப்போவதாக கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியது பொய்யான கதை என்று சிதம்பரம் விமர்சித்துள்ளார். அரசின் செலவினங்களை அதிகரித்தல் ஏழை மக்களுக்கு ரொக்கமாக பணம் வழங்குதல், ரேஷன் திட்டத்தை விரிவாக்குதல் ஆகியவற்றை செய்தால் மட்டும் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்று காங்கிரஸ் எச்சரித்ததாகவும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் பொருளாதார வல்லுநர்கள் பலரின் அறிவுரையை ஒன்றிய அரசு புறந்தள்ளியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜிடிபி மைனஸில் சென்றிருப்பதால் ஆண்டு சராசரி தனிமனித வருமானம் 1 லட்சத்தில் இருந்து 99,694ஆக குறைந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
23 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றுவிட்டதாக பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம் தனியார் நுகர்வு, மொத்த நிலையான முதலீடு உருவாக்கம், ஏற்றுமதி, இறக்குமதி பெரும் சரிவை சந்தித்திருப்பதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இந்த சீரழிவிற்கு பாஜக அரசின் இயலாமை, திறமையின்மையே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு