இந்திய கேப்டனுக்கு கொரோனா: நீளும் முன்னாள் வீரர்கள் பட்டியல்

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா பிடியில் சிக்கி வரும் நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர் கதையாகி உள்ளது.   முன்னாள் வீரர்கள் பங்கேற்ற அந்த டி20 போட்டித் தொடர் ராய்பூர், மும்பை நகரங்களில் நடந்தது. இந்தியா கோப்பையை வென்ற அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வங்கதேசம் இலங்கை உட்பட ஆகிய நாடுகளும் விளையாடின. போட்டி முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவராக கொரோனா பிடியில் சிக்கி வருகின்றனர். முதலில் அணியின் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை தொடர்ந்து, அந்த அணியில் விளையாடிய யூசப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத் ஆகியோருக்கு  தொற்று உறுதியானது. இப்போது இர்பான் பதானுக்கு கொரோனா தொற்றியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் நால்வரும் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது இந்திய மகளிர்  அணியின் அதிரடி வீராங்கனையும், டி20 அணி கேப்டனுமான ஹர்மன்பிரீத் கவுரும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார். அவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகினார். அதனால் அடுத்து நடந்த டி20 தொடருக்கு ஸ்மிரிதி மந்தானா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் ஹர்மன்பிரீத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவரும் வீட்டில் தனிமையில்  இருந்தபடி சிகிச்சைப் பெற்று வருகிறார்….

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சில்லி பாயின்ட்…

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்