இந்திய குடிமைப்பணி தேர்வு எழுதுவோர்களுடன் கவர்னர் சந்திப்பு

சென்னை: குடிமைப்பணி தேர்வு எழுதும் ஆர்வலர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய குடிமைப் பணிகளுக்கு தேர்வு எழுதும் பொறியியல் பட்டதாரி, மருத்துவ மாணவர், கலை அறிவியல் பட்டதாரிகள், விவசாய பட்டதாரிகள் என 200க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கேட்டனர். இந்த கலந்துரையாடலில் தேர்வர்களின் கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்து பேசுகையில், ‘‘குடிமைப் பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். சில வேளைகளில் தவறாகக் கூட முடிவுகள் எடுக்க நேரிடலாம். நானும் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஆனால்,  எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது. முடிவு எடுக்காவிட்டால் எதையும் கையாளும் தகுதி இல்லை; தகுதியற்றவர்கள் என அழைக்கப்படுவீர்கள்’’ என்றார். …

Related posts

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்..!!