இந்திய அணியில் இன்னொரு அப்பா

பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்  காயம் காரணமாக அணியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார். இந்நிலையில் அவரது மனைவி தன்யா வத்வாவுக்கு   நேற்று பெண் குழுந்தை பிறந்தது. அதனால் வலி மறந்து உற்சாகமான  உமேஷ், ‘இந்த உலகிற்கு வருக சின்ன இளவரசி…. நீ இங்கு இருப்பது சிலிர்ப்பாக உள்ளது’ என சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.  பிசிசிஐயும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. உமேஷ் சிகிச்சைக்காக நேரடியாக பெங்களூர் செல்ல வேண்டி உள்ளது. அதனால் அவருக்கு‘உடனடியாக மகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா’ என்பதை பிசிசிஐ முடிவு செய்யும். உமேஷ் விலகியதால் வாய்ப்பு கிடைத்துள்ள நடராஜனுக்கு பெண் குழுந்தை பிறந்து 3 மாதங்களாகிறது. அவரும் இன்னும் குழந்தையை பார்க்கவில்லை. நியூசி கேப்டன் கேன் வில்லியம்சன்னுக்கும் 2 வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து இந்திய கேப்டன் கோஹ்லி புது வரவுக்காக காத்திருக்கிறார்….

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சில்லி பாயின்ட்…

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்