`இந்தியா விற்பனைக்கு’: ராகுல் மீண்டும் தாக்கு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் செய்யும் வகையில், `இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கிண்டலடித்துள்ளார். ஒன்றிய அரசின் சொத்துக்களை ஏலம் விட்டு நிதி திரட்டும் ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தின் மூலம், நாட்டின் சொத்துக்களை தனது பணக்கார முதலாளித்துவ நண்பர்களுக்கு மோடி தாரை வார்த்து வருவதாகவும், 70 ஆண்டுகளாக பிற கட்சிகள் சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மோடி அரசு விற்று வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  `எந்தவொரு அரசும் நாட்டின் இயற்கை வளத்தை எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் பெருக்க செய்வார்கள். ஆனால், மோடி அரசு அவருடைய முதலாளி நண்பர்கள் லாபம் அடையும் வகையில் மதிப்பு மிக்க நமது சொத்துக்களை அழித்து வருகிறார். முதலில் மனசாட்சியை விற்றார். தற்போது…,’ என்று கூறியுள்ளார். மேலும், ‘இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்….

Related posts

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்

நக்சலைட்டுகளை ஒழிக்க சட்டீஸ்கரில் 4,000 சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு: பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்