இந்தியா – வங்கதேசத்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி; 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி

சட்டோகிராம்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.   இந்தியா- வங்கதேசம் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் சட்டோகிராம் ஜாஹூர் அகமது ஸ்டே டியத்தில் நேற்று தொடங் கியது. டாஸ் வென்ற இந் தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன் எடுத்திருந்தது. கேப் டன் கே.எல்.ராகுல் 22, சுப் மான் கில் 20, கோஹ்லி, புஜாரா 90, ரிஷப் பன்ட் 46. அக்சர் பட்டேல் 14 ரன்னில் அவுட் ஆகினர். ஸ்ரேயாஸ் ஐயர்  82 ரன் னில் களத்தில் இருந்தார்.2வது நாளான இன்று ஸ்ரேயாஸ் ஐயர்   மேற்கொண்டு 4 ரன் எடுத்து 86 ரன்னில் எபடோட் ஹொசைன் பந்தில் போல்டானார். இதையடுத்து ஜோடி சேர்ந்த அஸ்வின்-குல்தீப் யாதவ் நிதானமாக ஆடினர். உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் அரைசதம் அடித்த அஸ்வின் 58 ரன்னில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.8வது விக்கெட்டிற்கு இருவரும் 92 ரன் சேர்த்தது குறிப்பிடத்தது. பின்னர் உமேஷ் யாதவ் களம் இறங்கினர். இதனிடையே குல்தீப் யாதவ் 40 ரன்னில் தைஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கடைசி விக்கெட்டாக சிராஜ் 4 ரன்னில் கேட்ச் ஆனார். இந்தியா 133.5 ஓவரில் 404ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மிராஸ், தைஜுல் இஸ் லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹொசைன் சாண்டோ கேட்ச் ஆனார். அடுத்து வந்த யாசிர் அலி 4 ரன்களில் உமேஷ்யாதவ் பந்துவீச்சில் போல்டானார்.இந்திய அணியின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணி 271 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்க வங்கதேச அணிக்கு இன்னும் 72 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது….

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

சீனா ஓபன் டென்னிஸ் வது சுற்றில் ஹடாஜ் மாயா

88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து