இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப கோளாறால் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் – ஆப் சேவை சீரானது..

சென்னை: வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.உலக அளவில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முடங்கியது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை பயன்படுத்தி பயனர்களால் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர்.  இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடிக்கு அதிகமான வாட்ஸ்ஆப் பயனாளர்களை கொண்டுள்ளது.  தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சார்ப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். சென்னை, டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாட்ஸ்-ஆப் சேவை முடங்கியது. வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா தரப்பில் விரைவில் வாட்ஸ் அப் கோளாறு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது. பெரும்பாலான பயனர்களால் வாட்ஸ்அப் சேவையை முற்றிலுமாக பயன்படுத்த முடியவில்லை. இது மொபைல் மற்றும் வாட்ஸ் வெப் என அனைத்துக்கும் பொருந்தும். விரைவில் இந்த தொழில்நுட்ப சிக்கலை வாட்ஸ்அப் தளம் சீர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப் தளத்தின் பணி மிகவும் முக்கியமானது. அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் தனிப்பட்ட ரீதியாக பலரும் எளிய வழியில் தொடர்பு கொள்ள உதவுகிறது இந்த தளம். இப்போது இதன் சேவை முடங்கி உள்ளது உலகமே முடங்கியதை போல உள்ளது. ஒருவருக்கு ஒருவர் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாட்ஸ்-ஆப் சேவை முடங்கியது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் – ஆப் சேவை சீராகியுள்ளது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை சீரானது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை