இந்தியா உத்தரவாதம் அளித்தால் கடன் சர்வதேச நிதியம் திடீர் நிபந்தனை; இலங்கை திகைப்பு

கொழும்பு: ஏற்கனவே கடன் கொடுத்த நாடுகள் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, இலங்கைக்கு கடன் உதவி வழங்கப்படும் என சர்வதேச நிதியம் திடீர் நிபந்தனை விதித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.4 லட்சம் கோடி வெளிநாட்டு கடனுக்கான வட்டியை இலங்கை கட்டத் தவறியது. இதைத் தொடர்ந்து, திவால் நிலைக்கு தள்ளப்பட்ட அந்நாடு, பொருளாதாரத்தை மீட்க சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியது. கடந்த ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அரசுக்கு எதிராக போராட்டம் நடந்ததால் சர்வதேச நிதியம் பேச்சுவார்த்தை நடத்துவதை ஒத்தி வைத்தது.இந்நிலையில், தற்போது அரசியல் விவகாரம் சீரடைந்துள்ள நிலையில், மீண்டும் புதிய கடன் வழங்குவது தொடர்பான சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது. இதற்காக சர்வதேச நிதிய பிரதிநிதிகள் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்த வருகின்றனர். இதில், அதிகாரிகள் அளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு அந்நாட்டிற்கு கடன் வழங்கியவர்கள் போதுமான உத்தரவாதங்களை தர வேண்டுமென சர்வதேச நிதியம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகள் தான் அதிகளவில் கடன் கொடுத்துள்ளன. எனவே, இவை உத்தரவாதம் அளிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால், இலங்கை அரசு திகைத்துள்ளது….

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது