Friday, September 20, 2024
Home » இந்தியாவுடன் 2வது டெஸ்ட் : ஷர்துல் தாகூர் வேகத்தில் சரிந்தது தென் ஆப்ரிக்கா

இந்தியாவுடன் 2வது டெஸ்ட் : ஷர்துல் தாகூர் வேகத்தில் சரிந்தது தென் ஆப்ரிக்கா

by kannappan

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், ஷர்துல் தாகூரின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (63.1 ஓவர்). கேப்டன் ராகுல் 50, அஷ்வின் 46, அகர்வால் 26, ஹனுமா 20, பன்ட் 17, பும்ரா 14* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மார்கோ ஜான்சென் 4, ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்தது. கேப்டன் டீன் எல்கர் 11 ரன், கீகன் பீட்டர்சன் 14 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. அதன் பிறகு ஷர்துல் தாகூர் அபாரமாகப் பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்த… எல்கர் 28 ரன் (120 பந்து, 4 பவுண்டரி), கீகன் 62 ரன் (118 பந்து, 9 பவுண்டரி), வாண்டெர் டுஸன் 1 ரன், தெம்பா பவுமா (51 ரன் (60 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கைல் வெரெய்ன் 21, மார்கோ ஜான்சென் 21 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.ஷமி வேகத்தில் ரபாடா டக் அவுட்டானார். கேஷவ் மகராஜ் 21 ரன் எடுத்து பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாக, லுங்கி என்ஜிடி சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு மூட்டை கட்டினார். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (79.4 ஓவர்). ஆலிவியர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் 17.5 ஓவரில் 3 மெய்டன் உள்பட 61 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.ஷமி 2, பும்ரா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 27 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல்.ராகுல் 8, மயாங்க் அகர்வால் 23 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 44 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், புஜாரா – ரகானே இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன், ரகானே 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, 58 ரன் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இன்று 3வது நாள் ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடித்தால் தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்….

You may also like

Leave a Comment

twenty − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi