இந்தியாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு விரைவில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடத்திட்டம்?

டெல்லி: இந்தியாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது இருக்க மூன்றாவது பூஸ்டர் ஊசி போடுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களுக்கும் சைடஸ் பூஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் 12 – 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பிற நாடுகளில் பூஸ்டர் செலுத்தி கொண்டவர்களிடம் இருந்து பெறப்படும் மின்னூட்டங்களை பொறுத்து இந்தியாவிலும் பூஸ்டர் ஊசி அமலுக்கு வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தடுப்பு முயற்சியாக 2 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே ஒரு கருத்து எழுந்துள்ளது. அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.இந்தநிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இல்லை. எனவே, பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை. இப்போது, தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக போடுவதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒரு சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார்….

Related posts

பங்குச்சந்தைகள் சரிவு

விலை குறைபவை எகிறுபவை எவை? பட்ஜெட்டில் சுங்க வரி அறிவிப்புகள் மூலம் இனிமேல் விலை குறையக்கூடிய மற்றும் விலை அதிகரிக்கக் கூடிய பொருட்கள்:

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி