இந்தியாவில் மேலும் 8865 பேருக்கு கொரோனா பாதிப்பு, 197 பேர் உயிரிழப்பு, 11971 பேர் குணம்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 463852ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8865 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,56,401ஆக உயர்ந்தது.* புதிதாக 197 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 463852ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 11971 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33861756ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 130793 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* நேற்று 59,75,469 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* இந்தியாவில் இதுவரை 1,12,97,84,045 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.27%; உயிரிழப்பு விகிதம் 1.35% ஆக உள்ளது….

Related posts

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்