இந்தியாவில் ஜனநாயம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது: ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!

டெல்லி: இந்தியாவில் ஜனநாயம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் கையில் கருப்பு பட்டை அணிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் ஜனநாயம் என்பதே இல்லாத சூழல் நிலவுகிறது. சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய 2,3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்துவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை எல்லாம் நம் கண் முன்னால் அடித்து நொறுக்கப்படுகிறது. நாட்டில் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது; அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளை திசை திருப்புவதே ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. நான் எந்த அளவிற்கு அரசை எதிர்கிறேனோ, அந்த அளவிற்கு தாக்கப்படுவேன். உண்மையில் நான் இப்படி தாக்கப்படும் பொழுது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். போரில் காயம் ஏற்படும் பொழுது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அது போல இருக்கிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய அவர்; அத்தனை சுதந்திரமான அமைப்புகளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன எனவும் விமர்சனம் செய்தார். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்