இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 383 பேர் பலி, 34,167 பேர் குணம்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.45 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.35 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 26,964 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உயர்ந்தது.* புதிதாக 383 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 445768  ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 34167 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32783741 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 301989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 82,65,15,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* நேற்று ஒரு நாள் மட்டும் 75,57,529 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.92% ஆக உள்ளது….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு