இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 44 ஆக அதிகரிப்பு… அதிகபட்சமாக மராட்டியத்தில் 20 பேருக்கு தொற்று உறுதி!!

டெல்லி :ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கும் மராட்டியத்தில் மேலும் 2 பேருக்கும்  ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருப்பதால் இந்தியாவில்  ஓமிக்ரான்  பாதிப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட  ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகுவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட  ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் நேற்று 2 பேருக்கு  ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. லத்தூரில் ஒருவருக்கும் புனேவில் ஒருவருக்கும்  ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.இதன் மூலமாக அந்த மாநிலத்தில்  ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ராஜஸ்தானில்  ஓமிக்ரான் பாதிப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. குஜராத், கர்நாடகாவில் தலா 3 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், கேரளாவில் தலா ஒருவருக்கு  ஓமிக்ரான்  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில்  ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்