இந்தியாவில் ஒரே நாளில் 3,615 பேருக்கு கொரோனா… 22 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,615 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,79,088-ஆக உயர்ந்தது.* புதிதாக 22 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,584-ஆக உயர்ந்தது.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,09,525 -ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 44,436 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.72% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.09% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 2,17,96,31,500 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,87,533 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா