இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது..சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 16,000ஐ தாண்டியது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,927 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,65,496 ஆக உயர்ந்தது.* புதிதாக 32 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,654  ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,252 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,25,563 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,279 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 1,88,19,40,971 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 21,97,082 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு