இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம்: அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: “இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் தர தொடர்ந்து வலியுறுத்துவோம்,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் மதங்களை பின்பற்ற மக்களுக்கு சுதந்திரம் அளிக்கின்றனவா? மாறாக, கொடுமைபடுத்துதல், சிறை தண்டனை, கொலை ஆகியவற்றில் ஈடுபடுகிறதா என்பதை அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கண்காணிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரத்தை பட்டியலிட்டு வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக இந்த பட்டியலில் இருந்த இந்தியா தற்போது `கவலைக்குரிய நாடுகள்’ பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறிய போது, “இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கு பல மதங்கள் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், இந்தியா தொடர்பான சில கவலைக்குரிய தகவல்கள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் அளிக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும், இந்தியாவின் மத சுதந்திரம் தொடர்பான சூழ்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்,’’ என்றார்….

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி