இந்தியாவின் எரிபொருள் சப்ளை முடிகிறது இலங்கையில் அடுத்த மாதம் வாகனங்கள் ஓடுவது சந்தேகம்

கொழும்பு: இந்தியாவின் கடனுதவி மூலமாக வழங்கப்படும் கடைசி கட்ட எரிபொருள் இந்த மாதத்தில் இலங்கை சென்றடையும். இதன் பின், இலங்கை மேலும் எரிபொருள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் என அனைத்து அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதன் காரணமாக அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் பல மணி நேரங்கள் காத்துக்கிடக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. ஏப்ரல் முதல் சுமார் 10 மணி நேரம் மின்தடையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிக்கலில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு கைகொடுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையின் எரிபொருள் தேவைக்காக இந்தியா ரூ.3,908 கோடிக்கு கடனுதவி அளித்துள்ளது. இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு எரிபொருள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கவில்ைல. இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரா நேற்று கூறுகையில், ‘‘இந்தியாவின் கடனுதவி மூலம் வரும் அனுப்பப்படும் டீசல் 16ம் தேதியும், பெட்ரோல் வரும் 22ம் தேதியும் இலங்கை வந்தடையும். கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் 2800 – 3000 மெட்ரிக் டன்  மட்டுமே வழங்கினோம். வாரத்திற்கு தேவையான முழு டீசல் இப்போது வழங்கப்படுகின்றது. நாட்டின் தினசரி பெட்ரோல் தேவை 3500 டன். கடந்த செவ்வாயன்று முதல் நாள்தோறும் 3000 முதல் 3200 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்கப்படுகிறது,” என்றார். இந்தியாவின் கடனுதவியின் கீழ் அனுப்பி வைக்கப்படும் கடைசி கட்ட எரிபொருள்தான் வரும் 16, 22ம் தேதிகளில் வருகிறது. அதன் பிறகு, அடுத்த மாதம் முதல் ஏற்படக் கூடிய எரிபொருள் தேவையை இலங்கை எவ்வாறு சமாளிக்கும் என தெரியவில்லை. இதன் காரணமாக, இந்நாட்டில் வாகனங்கள் ஓடுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. …

Related posts

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி