இந்தியர்கள் பலர் பெண்களை மனிதராக கருதுவதில்லை: காங். முன்னாள் தலைவர் ராகுல் சாடல்

புதுடெல்லி: ‘கசப்பான உண்மை என்னவென்றால் இந்தியர்கள் பலர் பெண்களை மனிதராக கருதுவதில்லை’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். டெல்லியின் கஸ்தூரிபா நகரில்  கடந்த வாரம் 20 வயது இளம்பெண் ஒருவர் கும்பலால் கடத்தி அறையில் அடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏராளமான பெண்கள் இளம்பெண்ணின் தலையை மொட்டையடித்து அவருக்கு செருப்பு அணிவித்து அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பதபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அவனது தற்கொலைக்கு இளம்பெண்ணின் நடவடிக்கை தான் காரணம் என்று கூறி அவளை பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற கொடூர செயல்களில் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘20வயது இளம்பெண் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ நமது சமுதாயத்தின் கலகத்தை உண்டாக்கும் முகத்தை அம்பலப்படுத்துகின்றது. கசப்பான உண்மை  என்னவென்றால் இந்தியர்கள் பலர் பெண்களை மனிதர்களாக கருதுவதுகிடையாது. இந்த வெட்ககேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் வெளிக்கொணரப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்….

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு