இந்தியர்களை மீட்பது குறித்து பேச்சு?.. உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல்..!

டெல்லி :உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசுகிறார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல நகரங்களில் குண்டுவீசி நாட்டையே சர்வநாசமாக்கி வருகிறது. குறிப்பாக, கார்கிவ், மரியுபோல், சுமி போன்ற நகரங்களில் உச்சகட்ட தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்த தொடர் தாக்குதலால், பல நகரங்களில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிய மாணவர்கள், இந்தியர்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம், விமானப்படை விமானங்களால் 13,700 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!