இந்தியன் 2 பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு சாதகமான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு: தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணை

சென்னை:  இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம்  தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வக்கீல், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு  வழக்கை தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி