இது வேண்டுகோள் அல்ல; எச்சரிக்கை இந்துக்கள் அல்லாதோர் உள்ளே நுழைய கூடாது: வாரணாசியில் பரபரப்பு போஸ்டர்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி இந்துக்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. இது, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியும் கூட. இங்குள்ள கோயில்களை சமீபத்தில் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ‘வாரணாசியில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது,’ என்று ஆங்காங்கு எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதை செய்துள்ளனர். மேலும், ‘இது. வேண்டுகோள் அல்ல; எச்சரிக்கை,’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கங்கையை சுற்றுலாத் தளமாக நினைத்து உள்ளே நுழைபவர்களுக்காக இது போன்று பேனர்கள்  வைக்கப்பட்டுள்ளது. ‘சனாதன தர்மத்துக்கு மரியாதை தராதவர்கள் கங்கையில் புனித நீராக் கூடாது, வாரணாசி கோயிலை பார்வையிடக் கூடாது,’ என்று இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். …

Related posts

நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம்: ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை; நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோயில் நன்கொடை நிதியை செலவிட முறைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளதா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு பாதகமாகலாம்: உச்ச நீதிமன்றம்