இடையன்விளையில் பயணியர் நிழற்குடை

நாசரேத், ஜூலை 23: நாசரேத் அருகே கச்சனாவிளை பஞ். இடையன்விளையில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை, ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. பஞ். தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயணியர் நிழற்குடை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். இதில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி பிடிஓ பாக்கியம்லீலா, கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ்சேகர், கச்சனாவிளை பஞ். துணை தலைவர் ஷீலா, வார்டு உறுப்பினர்கள் பாக்கியராணி, அமுதா, ஷர்மிலி, கிறிஸ்டோபர் அருள்ராஜ், பஞ். செயலர் பர்னபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி