இடைத்தேர்தலுக்காக தலைமை வழங்கிய பணத்தை மகனின் வெற்றிக்காக செலவழித்தார் ஓபிஎஸ்: திண்டுக்கல் சீனிவாசன் ‘பகீர்’ குற்றச்சாட்டு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பிளவுபட்டபோது, தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்க முழுத்தகுதி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. பொதுச்செயலாளர் இபிஎஸ் கையொப்பமிட்ட உறுப்பினர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படுவது உறுதி.அதிமுகவில் உழைத்தவர்கள் மட்டுமே உயர்வார்கள். காட்டிக் கொடுத்தவர்கள் தாழ்ந்து போவார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக கட்சித்தலைமை மூலம் வழங்கப்பட்ட பணத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி தொகுதியில் முறையாக செலவழிக்கவில்லை. மாறாக அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு செலவு செய்தார். இதனால்தான் ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…