இசை கருவிக்குள் மறைத்து துபாயிலிருந்து தங்க கம்பிகள் கடத்தி வந்தவர் சிக்கினார்

சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 117 பயணிகள் வந்தனர். அவர்களை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அவர் துபாயில் இருந்து பியானோ கீபோர்டு இசைக்கருவி கொண்டு வந்திருந்தார். சந்தேகத்தின் பேரில், அந்த கீபோர்டை திறந்து சோதனையிட்டனர். அதனுள் 40க்கும் மேற்பட்ட தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 110 கிராம். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனர். அதோடு அவர் கடத்தி வந்த தங்க கம்பிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கீ போர்டையும் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை