ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் முகுருசா, அனெட்

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 6-3, 6-4 என்ற செட்கணக்கில், பிரான்சின் கிளாரா புரலை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், 6-4, 7-5 என ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை வென்றார். 6ம் நிலை வீராங்கனை எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட், 6-2, 6-3 என செக்குடியரசின் கேத்ரீனா சினியகோவாவை சாய்த்தார். போலந்தின் இகா ஸ்விடெக், ஸ்வீடனின் ரெபேக்கா பீட்டர்சன், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா ஆகியோரும் முதல்சுற்றில் வெற்றி பெற்றனர். 20ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 2-6, 2-6 என்ற செட் கணக்கில், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் முதல் சுற்றில், 5ம் நிலை வீரர் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-3, 6-2, 6-2 என இத்தாலியின் ஜியான்லூகாவை வீழ்த்தினார். குரோஷியாவின் மரின் சிலிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி