ஆவுடையார்கோயில் பள்ளியில் உலக ஓசோன் தினம் அனுசரிப்பு

 

அறந்தாங்கி, செப். 17: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினக் கொண்டாடப்பட்டது. உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு நேற்று ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

ஓசோன் தினத்தை முன்னிட்டு வழிபாட்டு கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஓசோன் படலம் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் நம்மைகாக்கும் ஓசோன் படலத்தில் நமது மனித இனத்தால் தற்பொழுது ஏற்படும் பாதிப்பு பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்